கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து வாராக்கடன் வசூல்

கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களிடமிருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன் மீட்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வங்கிகள் மீட்டுள்ள வாராக்கடன் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது 2017 -18ஆம் ஆண்டில் வங்கிகள் மீட்டுள்ள வாராக்கடன் 40 ஆயிரத்து 400 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 4 ஆயிரத்து 900 கோடி வங்கி திவால் சட்டம் மூலமாகவும்,26 ஆயிரத்து 500 கோடி ரூபாய் சர்பாசி சட்டத்தின் மூலமாகவும் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிபிட்டுள்ளது. மேலும் 2016 -17ஆம் ஆண்டில் வங்கி வசூலித்த வாராக்கடன் 38 ஆயிரத்து 500 கோடியாக உள்ளது. வாராக்கடன் மீட்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளின் மொத்த வாராக்கடன் கடன் 10லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version