முழு ஊரடங்கின் போதும் களை கட்டிய மீன் வியாபாரம்

தளர்வுகளற்ற ஊரங்கின் போதும், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில், பாதுகாப்பு இடைவெளியின்றி மீன் வியாபாரம் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வியாபாரம் நடைபெற்றது.

சில நிபந்தனைகளோடு துறைமுகத்திற்குள் சென்று வியாபாரிகள் மீன் வாங்குவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத் துறையின் சிறப்பு அனுமதியுடன் இன்று துறைமுகத்தில் மீன் வியாபாரம் நடைபெற்ற நிலையில், காவல்துறையினர் முன்னிலையில் மீன் வியாபாரிகள் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றாதது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மே 31ஆம் தேதி வரை குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களில் மீன் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் வலுத்துள்ளது

Exit mobile version