புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் அரிதான வானியல் நிகழ்வு இன்று நிகழ்கிறது.
இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும். புதன் கிரகம் சூரியனை, கடந்து செல்லும் போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கரும்புள்ளியாக மட்டுமே காட்சியளிக்கும். இதை வெறும் கண்ணில் பார்க்கக் கூடாது. தொலைநோக்கி மூலம் மட்டுமே பார்க்க வேண்டும். இந்தியாவில் 1999, 2003, 2006, 2016 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய நிகழ்வை நாளை காணலாம். அடுத்து 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதிதான் புதன் கிரகம், சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு மீண்டும் வானில் நிகழும்.