திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மணமக்களை வாழ்த்தினார்.
முன்னாள் வேளாண்மை துறை அமைச்சரும், தமிழக விவசாய பிரிவு கழகச் செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இல்ல திருமண வரவேற்பு விழா கலசப்பாக்கம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்கள் அருள்நேசன், துர்கா தேவி ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். திருமண வரவேற்பு விழாவில் சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன், கே.சி.வீரமணி, ராஜேந்திர பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செஞ்சி ஏழுமலை மற்றும் அதிமுக தொண்டர்கள், உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.