தோழி போல பேசி பெண்களுக்கு வலை… உஷார் பெண்களே உஷார்…!

ராமநாதபுரத்தில் தோழியை போல பேசி பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று ரசித்து வந்த இச்சை மிருகத்தை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்தவர் நம் கதையின் நாயகி. 19 வயதாகும் இவருக்கு சில நாட்களுக்கு முன் பள்ளித்தோழி ஒருவரிடம் இருந்து வாட்ஸப் மெசேஜ் வந்துள்ளது. நீண்ட நாட்களாக பேசாதவள் திடீரென்று லைனில் வர, உற்சாகம் ஆகி உரையாடலை தொடர்ந்துள்ளார் அந்த பெண்.

அவர் மூலம் அவருடைய மற்ற தோழிகள் எண்ணையும் பெற்றுக் கொண்ட அந்த திடீர் தோழி, பின் தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ அவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். அதில் சில பெண்கள் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் பகிர்ந்து கொள்வது முதல் அந்தரங்க புகைப் படங்கள் அனுப்புவது வரை தாரள பிரபுவாக நடந்துள்ளனர்.

இந்நிலையில் நம் கதையின் நாயகியை வாட்ஸப்பில் தொடர்பு கொண்ட அந்த திடீர் தோழி, உனக்கு திருமணம் ஆகி விட்டதா என்று கேட்டுள்ளார். ஒரே கிராமத்தில் இருக்கும் உனக்கு, எனக்கு திருமணம் ஆகி விட்டதா…? இல்லையா…என்பது தெரியாதா என்று அதிர்ச்சியாக, இதனை எப்படியோ சமாளித்து இணைப்பை துண்டித்தார் அந்த திடீர் பள்ளித் தோழி.

இந்த உரையாடலுக்கு பின் உஷாரான நம் கதையின் நாயகி, சம்மந்தப்பட்ட தோழியை அழைத்து விவரங்களை கூறி விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் யாருக்கும் மெசேஜ் அனுப்பவில்லை என்று கூற அதிர்ச்சி அடைந்த கதையின் நாயகி , சக தோழிகளுக்கு கால் செய்து அவர்களை அலர்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட, எண்ணின் சிக்னலை வைத்து அந்த திடீர் பள்ளித்தோழியை ரவுண்டு கட்டினர் அவர்கள். அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பதுங்கியிருந்த சம்மந்தபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த திடீர் தோழியின் உண்மை பெயர் பீமாராவ் என்பது கேர்ஸ் செர்ச் ஆப் என்ற ஆப்பின் மூலம் பெண்களின் எண்களை திருடி, வேறொரு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அந்த எண்ணில் இருந்து பேசுவது போல பேசி அந்தரங்க புகைப்படங்களை பெற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பீமாராவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக எல்லா செயலிகளையும் ஏற்றி வைத்திருக்கும் இளைய தலைமுறை அதில் இருக்கும் அபாயங்கள் குறித்து யோசிப்பதே இல்லை. அதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.

 

Exit mobile version