ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடரும் மின்வெட்டால் நெசவு தொழிலை கைவிடும் சூழலுக்கு, தள்ளப்பட்டுள்ளதாக நெசவுத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பாற்கடலின், பிரதான தொழிலான நெசவுத் தொழிலில், சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிசைத் தொழிலாக இயங்கி வரும் நிலையில், இப்பகுதியில் தொடர் மின்வெட்டு அதிகம் நிகழ்வதாக நெசவுத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சி அமைத்தது முதல் மின்வெட்டு அதிகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர்கள், நெசவுத் தொழிலை மேற்கொள்ள முடியவில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதியில், நெசவு பூங்கா அமைப்பது மற்றும் துணி நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது போன்றவை இடம்பெற்றிருந்த நிலையில், அதை நிறைவேற்றாமல் திமுக அரசு பாசாங்கு செய்து வருவதாக சாடியுள்ளனர்.
Discussion about this post