வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது – வானிலை மையம்!

வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அந்தமான் கடல் பகுதியில் வருகிற 14ம் தேதி உருவாகக் கூடும் என்பதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா ஆகிய கடலோர பகுதிகளில், இன்று மற்றும் நாளை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version