புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு மத்திய கிழக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், வேதாரண்யம் பகுதி மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளான கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி, மணியன் தீவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில், மீன்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி, வேதாரண்யம் பகுதி மீனவர்கள் சுமார்ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தியுள்ளனர்