மத்திய தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் அதைபொறுத்து தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலை ஒட்டிய மாலத்தீவு மற்றும் அதனை சார்ந்த லட்சதீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய தெற்கு வங்ககடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் அதன் தீவிரத்தை பொருத்து தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.