இந்தியாவில், மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில், வரும் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில், நாட்டின் வட மேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகள், தென்னிந்தியாவின் சில பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் வழக்கத்தை விட உயர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசத்தில் இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 0.37 டிகிரி செல்சியஸ் முதல் 0.41 செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்றும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த அளவிலேயே வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version