அடுத்த 3 தினங்களுக்கு இயல்பைவிட கூடுதல் வெயில் இருக்கும் – வானிலை ஆய்வு மையம் 

தமிழகத்தில் 3 தினங்களுக்கு இயல்பைவிட கூடுதலாக 40 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெயிலின் தாக்கம் பதிவாகியது. குறிப்பாக வேலூரில் 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் இன்று முதல் கத்திரி வெயில் துவங்குகிறது. இதன் காரணமாக,3 தினங்களுக்கு இயல்பைவிட கூடுதலாக 40 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையை நோக்கி காற்று வீசுவதன் காரணமாக வெப்பம் அதிகமாக பதிவாவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

 

 

Exit mobile version