சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்து124 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 4 ஆயிரத்து 368 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். தேர்தல் பிரசாரங்களின் போது பொதுமக்கள் முகக்கவசம் அணிவதையும் பாதுகாப்பு இடைவெளியை பின்பற்றுவதை அரசியல் கட்சியினர் உறுதி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். முகக்கவசம் அணிவதன் மூலம் எளிதான முறையில் கொரோனா பரவலை தடுக்கலாம் எனவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
Discussion about this post