இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவோம்-அமெரிக்கா

இந்தியா தங்களின் சிறந்த நட்பு நாடு என்றும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டுள்ளன. இந்தியத் தேர்தலின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மை அமெரிக்காவை வெகுவாக கவர்ந்துள்ளது என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு அமெரிக்க எம்பிக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

Exit mobile version