கொரோனா வைரசுக்கு எதிராக சீனாவுடன் இணைந்து பணியாற்றுவோம்- அதிபர் டிரம்ப்

மக்களை அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு எதிராக சீனாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தினந்தோறும் உயிரிழப்புக்களும், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 24,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் மாகாண கூட்டு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா வைரஸை ஒழிக்க சீனாவுடன் இணைந்து  போராட அமெரிக்கா தயாராக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், வைரஸ் பாதிப்புக்கு ஆளான அனைவருக்காகவும் கடவுளை  பிரார்த்திக்கிறேன் என்றும் மருத்துவத்துறையில் அமெரிக்கா சாதித்து வருவது எல்லோரும் அறிந்த ஒன்றே என்றும் தெரிவித்தார்.

Exit mobile version