தொண்டர்களை மதிக்காத கட்சியினரால் திமுக கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் பெரம்பலூர் மக்களவை திமுக கூட்டணி வேட்பாளராக பாரிவேந்தர் போடியிடுகிறார். இந்த தொகுதிகளில் உள்ள தொண்டர்களை இதுவரை அவரது கட்சியினர் சந்திக்க வரவில்லை என அப்பகுதி காங்கிரஸ் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினருக்கு கணிசமான ஓட்டு உள்ள நிலையில், பாரிவேந்தரின் ஐ.ஜே.கே கட்சியினர் புறக்கணிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் பைந்தமிழ் செல்வன் சிறுகனூரில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தருக்கு வாக்களிக்க கூடாது என்று முடிவு செய்யப்பட்டது.