கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க மாட்டோம் -எடியூரப்பா

கர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடமாட்டோம் என்று மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் பாஜக தலைவர்களை தான் சந்தித்து பேசிய போது கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் தான் ஈடுபட வேண்டாம் என்று அவர்கள் தன்னை அறிவுறுத்தியதாக கூறினார். அரசியல் லாபத்திற்காக சில எம்.எல்.ஏ.க்களை சித்தராமையா தன்னை சந்திக்க அனுப்பி வைப்பதாக கூறிய எடியூரப்பா, தகுந்த நேரத்திற்காக தாங்கள் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்தார். கர்நாடக அரசை பாஜகவினர் கவிழ்க்கவோ, தொந்தரவு செய்யவோ மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version