காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, தீவிரவாத தாக்குதலுக்கு, கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான அமைப்பிற்கு நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று ஆவேசமாக கூறினார்.
இந்த தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். தொடந்து பேசிய பிரதமர், தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் உண்டு என்று கூறினார். வீரமரணம் அடைந்த வீரர்களின் உயிர் தியாகத்திற்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று கூறிய மோடி, தாக்குதலுக்கு பின்பலமாக செயல்பட்ட பாகிஸ்தானை கடுமையாக பேசினார்.
இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும், அவர்களின் தாடை பதம் பார்க்கப்படும் என ஆவேசமாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் தீவிரவாத விவகாரத்தில் நாம் எந்த வேறுபாடு இன்றி ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.