பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் ஒருநாள் மீட்போம்

பாகிஸ்தான்வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறியுள்ள , ஒருநாள் நிச்சயம் அதனை மீட்போம் என தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சாதனைகளை விளக்குவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை சிலர் சுயநலத்திற்காக பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது அப்பிரிவு நீக்கப்பட்டதற்கான காரணத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனக் குறிப்பிட்ட அவர், ஒருநாள் நிச்சயம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் எனக் கூறியுள்ளார்.

Exit mobile version