திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் திமுகவுக்கு நல்ல பாடம் புகட்டியுள்ளதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் கொண்டு வந்த நலத்திட்டங்களை இன்றளவும் அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவோம் என்று தெரிவித்தார். விழாவில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு துணை முதலமைச்சர் வழங்கினார்.