குழந்தைகளுக்கு சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும்

குழந்தைகளுக்கு துரித வகை உணவு வகைகளை தவிர்த்து சத்து மிக்க பாரம்பரிய உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற, உணவு பாதுகாப்பு கலப்பட விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உணவுப் பொருள் கலப்படம் குறித்து உரிய விழிப்புணர்வை பொதுமக்கள் பெற்றிட வேண்டும் என்றார். குறைந்த உப்பு, குறைந்த இனிப்பு, குறைந்த கொழுப்பு ஆகியவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான நீண்ட வாழ்க்கைக்கு வழி வகுக்கலாம் என்றார். குழந்தைகளுக்கு துரித வகை உணவுகளை தவிர்த்து சத்து நிறைந்த, பாரம்பரிய உணவுகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

Exit mobile version