இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறினார். இலங்கையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்று இருப்பது, ஈழத் தமிழர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக வாசன் கவலை தெரிவித்தார்.
எனவே, தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய வெளியுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post