இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயணிக்கும் பேருந்தில், தோனியின் இருக்கை எப்போதும் அவருக்காகவே, காலியாக இருக்கும் என சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
3ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஹமில்டன் நகரில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் விளையாட்டு மைதானத்திற்கு, அவர்களுக்கான பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்தில் தோனி வழக்கமாக அமர்ந்து செல்லும் இருக்கை காலியாக இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல், தேனியின் இடம் அவருக்காக காத்திருப்பதாக கூறினார்.
அந்த இருப்பிடத்தில் மற்ற வீரர்கள் பயன்படுத்துவது இல்லை என்றும், இந்திய அணியின் வீரர்கள் அனைவரும், தோனியின் வருகைக்காக காத்திருப்பதாகவும் சாஹல் நெகிழ்ச்சியாக தெரிவித்தார். 2019 உலக கோப்பை தோல்விக்குப் பிறகு, தோனி இந்திய அணியில் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.