வாக்காளர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வேதனை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, சாந்தவீர கோபால்கவுடா காலத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் வாக்காளர்கள் ஊழல் செய்யவில்லை என்று தெரிவித்தார். அரசியல்வாதிகளும் வாக்காளர்களும் நேர்மையான செயல்பாடுகளை கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், வாக்காளர்களும் ஊழல்வாதிகளாக ஆகிவிட்டதாக கூறிய சித்தராமையா, வாக்காளர்கள், அவர்களாக ஊழல்வாதிகள் ஆகவில்லை என்றும் நம்மை போன்ற அரசியல்வாதிகள் தான் அவர்களை ஊழல்வாதிகளாக மாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டார். தேர்தலில் நேர்மையாளர்கள் எளிதாக வெற்றி பெற முடியாது என்றும் அவர் கூறினார்.