எமது துணிச்சல் குறித்து தங்களின் சான்று எமக்குத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி கொடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடந்த நிகழ்ச்சியில், பாஜக தொண்டர்கள், முதலில் குடும்பத்தையும் பின்னர் கட்சியையும், நாட்டையும் கவனித்துக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். இதற்கு, கட்கரி துணிச்சல் மிகுந்தவர், இதே போல் ரஃபேல் ஊழல், அனில் அம்பானி, சிபிஐ, ஆர்பிஐ போன்றவற்றில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டும் என, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, எமது துணிச்சல் குறித்து தங்களது சான்றிதழ் தேவையில்லை என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும், திரித்து வெளியான செய்தியை கருத்தில் கொண்டு பேசக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.