தஞ்சாவூர் பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கவில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியான நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்தநிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தஞ்சாவூர் பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சி நடத்த எதன் அடிப்படையில் அனுமதி அளித்தப்பட்டது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தொல்லியல் துறை தரப்பு வழக்கறிஞர், பெரிய கோயிலில் நிகழ்ச்சி நடத்த தொல்லியல் துறை அனுமதி அளிக்கவில்லை என்றார். இதனையடுத்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மற்றும் தேவஸ்தானம் இணை ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.