நீட் தேர்வை ஏற்க முடியாது – தமிழக அரசு திட்டவட்டம்!

நீட் தேர்வை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளோடும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் அதிகாரிகள் இன்று காணொலி மூலம், நீட் தேர்வு தொடர்பான கூட்டத்தை நடத்தினர். இதில், தமிழக அரசு சார்பில், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் மலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தமிழக அரசு அதிகாரிகள், தமிழக அரசு நீட் தேர்வை ஏற்காது என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தமிழக அரசு ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றும், மத்திய அரசிடம் தமிழக அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வை ஏற்க முடியாது: தமிழக அரசு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளோடு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை தமிழகம் சார்பில் மருத்துவ கல்வி இயக்குநர், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு தமிழக அரசு நீட் தேர்வை ஏற்காது; நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை: தமிழக அதிகாரிகள் தமிழக அரசு ஏற்கனவே அமல்படுத்தி வரும் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்: தமிழக அரசு பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வாய்ப்பில்லை என்றும், மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Exit mobile version