இனவாதத்திற்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்க இருக்கிறோம்: கமலா ஹாரிஸ்

இனவாதத்திற்கு எதிராக இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். வில்மிங்டனில் பிரசாரம் செய்த அவர், கருப்பு, வெள்ளை, லத்தீன் மற்றும் ஆசியாவை கூட்டாக ஒருங்கிணைக்க விரும்பும் ஜோ பைடனை புதிய அதிபராக தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். தலைமை பண்பில் டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்து விட்டதாக விமர்சித்தார். கடந்த ஆட்சி காலத்தில் மக்கள் உயிர்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இனவாதத்திற்கு எதிராக தடுப்பூசி இல்லை என்றும் நாங்கள் அந்த வேலையை செய்ய இருப்பதாகவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

Exit mobile version