அரசு மருத்துவமனையில் அலைக்கழிப்பு – வயதான தம்பதி தர்ணா

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், நான்கு நாட்களாக சிகிச்சைக்கு அலைக்கழிக்கப்படுவதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயதான தimageம்பதி, ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் வயதான தம்பதியான வெங்கடேசன் – மன்னம்மாள் ஆகியோருக்கு கடந்த 31ம் தேதியன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய வெங்கடேசன் – மன்னம்மாள் தம்பதி, ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, இருவரையும், தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுகமுறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற தொடர் குற்றச்சாட்டிற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version