குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு வரும் நீர்நிலைகள்

குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 14 ஆயிரத்து 144 ஏரிகளில், 3 ஆயிரத்து 982 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், தற்போது வரை பெய்த மழையால் தமிழகத்தில் மொத்தமுள்ள 14 ஆயிரத்து 144 ஏரிகளில், 3 ஆயிரத்து 982 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கடலோர மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரத்து 411 ஏரிகளில், 2 ஆயிரத்து 532 ஏரிகளும், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் உள்ள 7 ஆயிரத்து 605 ஏரிகளில், ஆயிரத்து 252 ஏரிகளும், முழுக்கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version