கோடைக்காலம் துவங்கும் முன்பே சூடுபிடித்துள்ள தர்பூசணி விற்பனை

கோடைக்காலம் துவங்கும் முன்பாகவே தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

வழக்கமாக கோடை காலம் துவங்கும்போது அதிக அளவில் தர்பூசணிப் பழங்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காலை 9 மணி வரை பனிப்பொழிவு இருந்தாலும், பிற்பகல் 12 மணிக்கு மேல் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால், சாலையில் நடமாட முடியாமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள, தர்பூசணி பழங்களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மாநிலத்தில் இருந்தும், தர்பூசணி பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

Exit mobile version