கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் நிறுத்தப்பட்டதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர், கடந்த ஒரு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தப்பட்டது. இதனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 900 கனஅடியாக இருந்த நீர்வரத்து 500 கனஅடியாக குறைந்துள்ளது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவிக்கும் நீர்வரத்து குறைந்த போதிலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.