வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது

அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாய பெருமக்களின் கோரிக்கையை ஏற்று வாய்க்கால் பாசனத்திற்காக வரட்டுபள்ளம் அணையில் இருந்து 49 நாட்களுக்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் அணையில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்காக நீரை திறந்து விட்டார். இந்த நீர் திறப்பின் மூலம் 2 ஆயிரத்து 924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 33.5 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுப்பள்ளம் அணையில், தற்போது 24 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கோரிக்கையை ஏற்று நீர்திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version