கோடை மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துளனர்

தேனி மாவட்டத்திலுள்ள முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயரத் துவங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களாக பெரியாறு அணை நீர்பிடிப்பில் மழையின்றி அணை நீர்மட்டம் 112 அடிவரை குறைந்தது காணப்பட்டது . இந்நிலையில் கடந்த 6 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு 100 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 286 கன அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் 112.10 அடியில் இருந்து 112.60 அடியாக உயர்ந்துள்ளது. 152 அடி மொத்த உயரம் கொண்ட அணையிலிருந்து தமிழகப்பகுதியின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால் ஜூன் மாதம் வரை குடிநீருக்கு சிக்கல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version