ஏலகிரி மலையில் வன விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டி அமைத்த இளைஞர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏலகிரிமலை 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது. இங்கு மான், குரங்கு மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் அவதிப்பட்டு வருகின்றன. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் கொண்டை ஊசி வளைவுகளுக்கு ஒரு தொட்டி அமைத்து தண்ணீர் ஊற்றினர். இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தாகம் தணித்து செல்கிறது. இளைஞர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.