மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6 ,043 கன அடியாக அதிகரிப்பு

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6 ,043 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் வரத்து 6 ,0 26 கன அடியிலிருந்து 6,043 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதன் படி அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 5 ,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version