நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பரவலான மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணை மூலம் 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததாலும், சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவியதாலும், அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பரவலான மழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி 459 கன அடியாக இருந்த நீர்வரத்து 675 கன அடியாக அதிகரித்துள்ளது.