கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோரையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் சேர்ந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டாரத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் கோரையாறு வழியாக வீணாக கேரளாவுக்கு சென்று கடலில் கலந்து வந்தது. இதையடுத்து கோரையாறு குறுக்கே தடுப்பணை கட்ட ராமபட்டினம், தாவளம், பட்டியகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 2 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வரும் சூழலில் தடுப்பணையில் சுமார் 1 டிஎம்சி வரை நீர் சேர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தங்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.