பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக, ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், இன்று முதல் நிறுத்தப்பட்டது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை இரண்டாம் போக வாய்க்கால் பாசனத்திற்காக, கடந்த ஜனவரி மாதம் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக மழையின் அளவு குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவு கனிசமாக குறைந்தது. இதனால், பாசனத்திற்காக விநாடிக்கு 850 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 52 புள்ளி 21 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 5 புள்ளி 2 டிஎம்சியாகவும் உள்ளது. இதேபோல், அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 114 கன அடியாக உள்ளது.

Exit mobile version