தனியார் ஆழ்துளைக் கிணற்றில் நீர் எடுத்து விற்க எதிர்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்து, விற்பனை செய்தவரின் நீர் சேமிப்பு குழியை உடனடியாக மூடி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

பாத்திமாமலையில் தனியார் அமைப்பினர்1200 அடி ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதன் மூலம் லாரிகள் மூலம் நீர் விற்பனை செய்து வந்தனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைவதாகக்கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நீரை விற்பனை செய்தவரின் சேமிப்பு குழியை, ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் மூடி, உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

Exit mobile version