கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர், பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டுக்கு 2 தவணைகளாக குடிநீர் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. திறந்து விடப்பட்ட 6.5 டிஎம்.சி நீர் பூண்டி நீர்த்தேக்கம் வந்தடைந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் ஆயிரத்து 512 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாகவும், 607 கனஅடி வீதம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Exit mobile version