ஸ்டெர்லைட் ஆலையால் நீர் நிலைகளில் தண்ணீர் மாசுபாடு : மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய பாதிப்பால், தூத்துக்குடியில், கிணறுகளில் உள்ள தண்ணீர் பயன்படுத்த தகுதியற்றவையாக மாறிவிட்டதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வில் ஒன்பதாவது நாளாக விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், சி.எஸ் வைத்திய நாதன் ஆலையை எதிர்த்து வாதிட்டார். அப்போது, தாமிர கழிவுகள் அபாயகரமான கழிவுகள் இல்லை என்ற வேதாந்தா தரப்பு வாதம் தவறு எனவும், அங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும், அபாயகரமான கழிவு பட்டியலில் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், நீர் நிலைகளில் அபாயகரமான கழிவுகளை வெளியேற்றியது ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே எனவும் வாதிட்டார். இதனையடுத்து, நாளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version