12 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 118 அடி கொள்ளளவுக் கொண்ட மணிமுத்தாறு அணை அமைந்துள்ளது. தற்போது இந்த அணையின் நீர்மட்டம் 107 கன அடியாக உள்ளது. இந்நிலையில் பிசான பருவ சாகுபடிக்காக அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளன. அணையை சார் ஆட்சியர் ஆகாஷ் திறந்து வைத்தார்.
இதன் மூலம் நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி, திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டத்தின் திருவை குன்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் பகுதிகளில் 12 ஆயிரத்து 18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனிடையே நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.