பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நாளை மறுநாள் நிறுத்தம்

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மறுநாள் நிறுத்தப்படவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. 6 சுற்றுகளாக தண்ணீர் திறக்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் 5 சுற்றுகளாக குறைக்கப்பட்டு நாளை மறுநாள் 21 ம் தேதி காலை 6 மணிக்கு நீர் திறப்பு நிறுத்தப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.45 அடியாகவும் நீர் இருப்பு 5.5 டிஎம்சி யாகவும் உள்ளது.

Exit mobile version