ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த டி.என். பாளையம் வனபகுதியில் குண்டடேரிப்பள்ளம் அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் கொங்கர்பாளையம், வாணிப்புதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள 2 ஆயிரத்து 498 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுக பாசனமாக 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்நிலையில் புன்செய் பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் பாசனத்திற்காக 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு ஆணை பிறப்பித்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்