குடிமராமத்து பணிகள் மூலம் நிரம்பிய நீர் நிலைகள்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, தமிழக அரசின் குடிமராமத்துப் பணியின் மூலமாக தூர்வாரப்பட்ட வீரன் குளம் கண்மாய் முழுவதுமாய் நிரம்பி உபரி நீர் மருகால் பாய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கட்டக்காமன்பட்டி பகுதியில் உள்ள சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் தென்னை, நெல் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு பிரதானமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களும் பருவமழைக்கு முன்பாகவே குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள வீரன் குளம் கண்மாய் முழுவதுமாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், தென்னை வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடிமராமத்து பணி மேற்கொண்ட தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version