சிவகங்கையில் குடிமராமத்து பணியின் மூலம் நிரம்பி உள்ள நீர் நிலைகள்

சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணியின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயம் செய்ய, அப்பகுதி மக்கள் தயாராகி வருவதை அடுத்து தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதிகளில் போதிய நீர் வரத்து இல்லாமல் கடந்த 12 ஆண்டுகளுக்கும் விவசாய பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் குடிமாராமத்து பணிகள் மூலம் மாநிலம் முழுவதும் நீர் நிலைகளை தூர்வாருதல் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் உள்ள பல்வேறு கண்மாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் வீணாகாமல் கண்மாயில் தேங்கியது. இதுவரை கிணற்றுத் தண்ணீரை நம்பி மட்டுமே விவசாயம் செய்து வந்த நிலையில், தொடர் மழையால் அனைத்து நீர் நிலைகளும்நிரம்பியதால், அப்பகுதி மக்கள் விவசாய பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நெற்பயிர் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி இருப்பதால், மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version