கோடை மழையின் காரணமாக உறைகிணறுகளில் நீர் மட்டம் உயர்வு

அண்மையில் பெய்த மழையின் காரணமாக, வைகை அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள உறை கிணறுகளில், நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், குடிநீர் பிரச்னை நீங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்வரை சுட்டெரித்த வெயிலால், தேனிமாவட்டத்தில் உள்ள முக்கிய குடிநீர் திட்ட உறை கிணறுகள் இருக்கும் வைகை அணை மற்றும் குன்னூரில், நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால், வைகையை நம்பியுள்ள வள்ளல் நதி கூட்டு குடிநீர் திட்டம்,அரப்படித்தேவன்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டம், தேனி அல்லிநகரம் கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றிற்கு நீர் கிடைக்காமல் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக போடி, தேனி, வருசநாடு பகுதியில் பெய்த மழையால் குன்னூர் வைகை ஆற்றில், உறைகிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நீர்த்தட்டுப்பாடு நீங்கியதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Exit mobile version