கீழ்பென்னாத்தூர் அருகே கொளத்தூர் ஏரி தூர் வரப்பட்டதால், நெல் பயிரிட்ட நீர்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கொளத்தூர் ஏரி தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தால் தூர்வாரப்பட்டது. இதனால் ஏரியில் நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், குளம் தூர் வாரப்பட்டதால், அப்பகுதி இளைஞர்கள் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அரசின் குடிமராமத்து பணியால் தண்ணீர் நிரம்பி வருவதால் நீர்ப்பாசன விவசாயிகள் அதிக அளவில் நெல் பயிரிட்டு வருகின்றனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நெல் பயிரிட்ட நீர்பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இளைஞர்கள் தினந்தோறும் ஏரியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.