மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நான்கு மடங்கு குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நான்கு மடங்கு குறைந்தது. கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததை அடுத்து அங்கிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துவருகிறது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 27,077 கன அடியிலிருந்து 7679 கன அடியாகக் குறைந்துள்ளது.

அணைகளின் நீர் நிலவரம்:

மேட்டூர் அணை

நீர் மட்டம் – 99.12 அடி,

நீர் இருப்பு – 63.70 டி.எம்.சி.

கள்ளக்குறிச்சி கோமுகி அணை

நீர்மட்டம் :46.00 கன அடி

நீர்இருப்பு : 44.00 கன‌அடி

‌ நீர் வரத்து- 30 கன அடி

திறப்பு : 30கன அடி நீர்

பவானிசாகர் :

நீர்வரத்து – 3,177 கன அடி

நீர்மட்டம் – 101.97 அடி

நீர் இருப்பு – 30.2 டி.எம்.சி.

திறப்பு – 3,150 கன அடி.

Exit mobile version