பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபட்டதால் அதன் நீர்த்தேக்க பகுதியில் நடைபெற்று வந்த பரளிக்காடு சூழல் சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளைத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சூழல் சுற்றுலா நடைபெறும் பரளிக்காடு முழுவதும் தண்ணீரால் மூழ்கி உள்ளது. இதனால் இந்த வாரத்திற்கான சூழல் சுற்றுலா தடை செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.